தேசிய செய்திகள்

ஆந்திர மாநில ஆளுநராக நியமனம் : சுஷ்மா சுவராஜ் மறுப்பு + "||" + Minister Wishes Sushma Swaraj On New Appointment. Not True, She Says

ஆந்திர மாநில ஆளுநராக நியமனம் : சுஷ்மா சுவராஜ் மறுப்பு

ஆந்திர மாநில ஆளுநராக நியமனம் : சுஷ்மா சுவராஜ் மறுப்பு
ஆந்திர மாநில ஆளுநராக முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டதாக நேற்று வெளியான தகவலை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.
புதுடெல்லி,

கடந்த பாஜக ஆட்சியின் போது  மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றியவர் சுஷ்மா சுவராஜ். உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில்  நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. மத்திய அமைச்சரவை பதவியேற்பின்போது, அமைச்சரவையில் இடம் வேண்டாம் என மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்ததாக, நேற்று இரவு சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆளுநராக நரசிம்மன் பதவி வகித்து வருகிறார். எனவே, நரசிம்மனை தெலுங்கானாவுக்கு மட்டும் ஆளுநராக தொடரச் செய்துவிட்டு, ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவித்தன. அதேநேரம், குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சுஷ்மாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அதை ஹர்ஷர்வர்தன் நீக்கினார்.

இந்நிலையில்,  ஆந்திர மாநில ஆளுநராக தான் நியமிக்கப்பட்டதாக வெளியான தகவலை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் மறுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதவில்,

வெளியுறவுத்துறை அமைச்சக பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வது தொடர்பாக, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்ததாகவும், அதற்குள் டுவிட்டரில் தன்னை ஆந்திரா கவர்னராக நியமித்து விட்டனர் எனவும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரா ஆளுநராக தன்னை நியமித்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், சுஷ்மா தனது மற்றொரு டுவிட்டில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல்
ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
2. கடந்த அமைச்சரவையில் தனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி : சுஷ்மா சுவராஜ் உருக்கம்
மோடியின் கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், மக்களுக்கு சேவை புரிய பிரதமர் தனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
3. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து
நாடு முழுவதும் 300 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
4. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சுஷ்மா சுவராஜ் இன்று பங்கேற்பு
கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பங்கேற்க உள்ளார்.
5. பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள், வீரர்கள் கொல்லப்படவில்லை: சுஷ்மா சுவராஜ்
பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள், வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.