தேசிய செய்திகள்

13 பேருடன் சென்ற ஏ.என்-32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு + "||" + Indian Air Force The wreckage of the missing AN-32 was spotted today 16 Kms North of Lipo

13 பேருடன் சென்ற ஏ.என்-32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு

13 பேருடன் சென்ற ஏ.என்-32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன ஏ.என்-32 ரக விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசம் சியான் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

13 பேருடன் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானம் ஜூன் 3-ம் தேதி மதியம் 12.25 மணி அளவில் காணாமல் போனது. காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க விமானப்படை விமானங்கள், ராணுவம், மலைவாழ் மக்கள் உதவியுடன் ஒரு வாரமாக தேடும்பணி நடைபெற்றது.  காணாமல் போன விமானத்தை கண்டறிவதில் மோசமான வானிலை காரணமாக சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், அருணாச்சலப்பிரதேசம் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே சிதைந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

விமானம் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படையும் உறுதி செய்துள்ளது. அதில் பயணம் செய்த 13 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.