தேசிய செய்திகள்

உ.பி.யில் மீண்டும் ஆன்டி-ரோமியோ படையை கொண்டுவர யோகி ஆதித்யநாத் உத்தரவு + "||" + Re-activate anti-Romeo squads UP CM

உ.பி.யில் மீண்டும் ஆன்டி-ரோமியோ படையை கொண்டுவர யோகி ஆதித்யநாத் உத்தரவு

உ.பி.யில் மீண்டும் ஆன்டி-ரோமியோ படையை கொண்டுவர யோகி ஆதித்யநாத் உத்தரவு
உ.பி.யில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய ஆண்களை தொடர்ச்சியாக கண்காணிக்க போலீசுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் 2017-ல் பொறுப்பு ஏற்ற பின்னர் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதைத் தடுப்பதற்காக ரோமியோ தடுப்புப்படை என்ற பெயரில் காவல்துறை குழுக்களை அமைத்தார். இதன்படி பொது இடங்களில், சாதாரண உடை அணிந்த பெண் காவலர்கள் ரகசியமாக ஊடுருவி கண்காணித்தனர். இதனையடுத்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அப்போது காதலர்களும் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியது. இப்போது மாநிலத்தில் சிறுமி கொடூரமான கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் செய்தி அங்கிருந்து தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் உ.பி.யில் மீண்டும் ஆன்டி ரோமியோ படையை செயல்படுத்த போலீசுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில்  தொடர்புடையவர்களை தொடர்ச்சியாக கண்காணிக்கவும், கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

பெண் போலீசாரை இதுபோன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி வழக்கின் மனுதாரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் : யோகி ஆதித்யநாத் உத்தரவு
அயோத்தி வழக்கின் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பின் 18 மனுதாரர்களுக்கு துப்பாக்கிய ஏந்திய பாதுகாவலர்கள் மூலம் பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
2. உத்தரபிரதேசத்தில் மசூதிக்குள் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு
உத்தரபிரதேசத்தில் மசூதிக்குள் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. ரூ.2000-க்கு 50 முட்டை சாப்பிடும் பந்தயம், 42-வது முட்டையில் பலியானவர்...
உத்தரபிரதேசத்தில் 50 முட்டை சாப்பிடும் பந்தயத்தில் 42-வது முட்டை சாப்பிடும்போது ஒருவர் பலியாகி உள்ளார்.
4. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்த தடை
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்துவதற்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
5. உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 13 பேர் சாவு - 2 மாடி வீடு இடிந்து தரைமட்டம்
உத்தரபிரதேசத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 2 மாடி வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.