மாநில செய்திகள்

குற்றாலத்தில் மிதமான சாரலுடன் இதமான சூழல்; சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ச்சி + "||" + Courtallam season starts

குற்றாலத்தில் மிதமான சாரலுடன் இதமான சூழல்; சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ச்சி

குற்றாலத்தில் மிதமான சாரலுடன் இதமான சூழல்; சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ச்சி
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது.

மழை காரணமாக குற்றாலம் பகுதியிலும் மிதமான சாரலுடன், இதமான சூழல் நிலவி வருகிறது. முக்கிய அருவிகளில் காலை நீர்வரத்து அதிகரித்து  காணப்பட்ட நிலையில் நண்பகலில் நீர்வரத்து மிதமாக இருந்தது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க விதித்த தடையை போலீசார் விலக்கிக் கொண்டனர். மிதமான நீர் வரத்தால் சுற்றுலா பயணிகள் பயமின்றி அருவியில் குளித்து மகிழ்ந்தனர். வெயிலும், மிதமான சாரல் மழையும், இதமான சூழலும் குற்றாலத்தில்  நிலவுவதால் சீசனை நன்றாக அனுபவித்து வருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குற்றாலத்தில் சீசன் தொடங்கியது : மெயின் அருவி-ஐந்தருவியில் தண்ணீர் கொட்டுகிறது
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் நேற்று தண்ணீர் கொட்டியது. சீசன் தொடங்கியதையடுத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
2. குற்றாலத்தில் தமிழக–கேரள போலீசார் கலந்தாய்வு கூட்டம்
தமிழக–கேரள போலீசார் கலந்தாய்வு கூட்டம் குற்றாலத்தில் நடந்தது.