மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கை ஏன் எதிர்கொள்ள கூடாது? -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி + "||" + Why should Senthil Balaji do not face the case? Chennai High Court

செந்தில் பாலாஜி வழக்கை ஏன் எதிர்கொள்ள கூடாது? -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

செந்தில் பாலாஜி வழக்கை ஏன் எதிர்கொள்ள கூடாது? -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றசாட்டில் செந்தில் பாலாஜி ஏன் வழக்கை எதிர்கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை,

கடந்த 2011-15 கால கட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.95  லட்சம் மோசடி செய்ததாக அவரது நண்பர் கணேஷ்குமார் மத்திய குற்றப்பிரிவில் புகார் கூறியிருந்தார்.

இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வேலைவாங்கி தருவதாக மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில் முகாந்திரம் உள்ளதால், வழக்கை ஏன் எதிர்கொள்ளக்கூடாது என திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.