தேசிய செய்திகள்

லண்டன் ஏல மையத்தில் இந்தியரின் ஓவியம் ரூ.22 கோடிக்கு விற்று சாதனை + "||" + Indian painting at the London Auction Center has sold a record for Rs 22 crore

லண்டன் ஏல மையத்தில் இந்தியரின் ஓவியம் ரூ.22 கோடிக்கு விற்று சாதனை

லண்டன் ஏல மையத்தில் இந்தியரின் ஓவியம் ரூ.22 கோடிக்கு விற்று சாதனை
லண்டன் ஏல மையத்தில் இந்தியரின் ஓவியம் ஒன்று ரூ.22 கோடிக்கு விற்று சாதனை படைத்தது.
புதுடெல்லி,

இந்திய ஓவியர் பூபன் காகர் வரைந்த ஓவியம் ரூ.22 கோடியே 39 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. அவர் 1934-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். 2003-ம் ஆண்டு காலமானார். அவரது ஓவியங்கள் சர்வதேச புகழ் பெற்றவை.


சுவிஸ் நாட்டை சேர்ந்த கய், ஹெலன் பார்பியர் ஆகியோர் சேகரித்து வைத்திருந்த காகர் உள்ளிட்ட இந்திய ஓவியர்களின் 29 ஓவியங்கள், லண்டனில் உள்ள சூத்பி ஏல நிறுவனத்தின் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டன. அவற்றில், காகர் 1982-ம் ஆண்டு வரைந்த ‘டூ மென் இன் பெனாரஸ்’ என்ற ஓவியம், ரூ.22 கோடியே 39 லட்சத்துக்கு விலை போனது.

இதன்மூலம், அவரது 1972-ம் ஆண்டு ஓவியம் படைத்த விற்பனை (ரூ.9 கோடியே 71 லட்சம்) சாதனையை இந்த ஓவியம் முறியடித்தது. அனைத்து ஓவியங்கள் மூலம் ரூ.66 கோடியே 23 லட்சம் கிடைத்தது.