தேசிய செய்திகள்

நேபாளத்தில் நிகழ்ந்த விபத்தில் 2 இந்தியர்கள் பலி + "||" + 2 Indians killed in Nepal

நேபாளத்தில் நிகழ்ந்த விபத்தில் 2 இந்தியர்கள் பலி

நேபாளத்தில் நிகழ்ந்த விபத்தில் 2 இந்தியர்கள் பலி
நேபாளத்தில் நிகழ்ந்த விபத்தில், 2 இந்தியர்கள் பலியாகினர்.
காத்மாண்டு,

நேபாள நாட்டுக்கு இந்தியாவில் இருந்து 60 பேர் சுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு காத்மாண்டுவில் இருந்து ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

ரவுத்தாட் மாவட்டம் பவுராய் வனப்பகுதியில் பஸ் சென்ற போது ஓய்வுக்காக சிறிது நேரம் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த லாரி, பஸ் மீது மோதியது. இதனால் பஸ் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டது.


இந்த விபத்தில் பஸ்சில் இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜய்குமார் ஜெனா (வயது 52), சரண் பிஷால் (54) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி
சமயபுரம் அருகே நேற்று அதிகாலையில் சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 ஆசிரியைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. நாகையில் லாரி ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீவிபத்து ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
நாகையில், லாரி ஒர்க்‌ஷாப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ. 20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
3. நேபாளத்தை சேர்ந்த 2 பேர் மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ்காரர்களை கல்வீசி தாக்கியதால் அதிரடி நடவடிக்கை
பெங்களூருவில் திருட்டு வழக்கில் கைதாகி போலீஸ்காரர்களை கல்வீசி தாக்கிவிட்டு தப்பியோடிய நேபாளத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
4. இளையான்குடி அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி
இளையான்குடி அருகே பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார், 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
5. ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாத தாக்குதல் : 11 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.