தேசிய செய்திகள்

கேரள சட்டசபைக்கு சென்ற மத்திய மந்திரி கட்காரி: முதல்-மந்திரியுடன் விருந்து சாப்பிட்டார் + "||" + Gadkari, who went to Kerala assembly: He had a feast with the chief Minister

கேரள சட்டசபைக்கு சென்ற மத்திய மந்திரி கட்காரி: முதல்-மந்திரியுடன் விருந்து சாப்பிட்டார்

கேரள சட்டசபைக்கு சென்ற மத்திய மந்திரி கட்காரி: முதல்-மந்திரியுடன் விருந்து சாப்பிட்டார்
கேரள சட்டசபைக்கு சென்ற மத்திய மந்திரி கட்காரி, கேரள முதல்-மந்திரியுடன் விருந்து சாப்பிட்டார்.
திருவனந்தபுரம்,

மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று கேரள மாநிலத்துக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டார். அவர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டசபைக்கு தனிப்பட்ட பயணமாக சென்றார். அவர் முக்கிய பிரமுகர்களுக்கான மாடத்தில் தனது குடும்பத்தினருடன் சிறிது நேரம் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தார். அவரது வருகையை சபையில் சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தபோது, உறுப்பினர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


பின்னர் முதல்-மந்திரியின் அதிகாரபூர்வ இல்லத்தில் பினராயி விஜயனுடன் நிதின் கட்காரியும், குடும்பத்தினரும் விருந்து சாப்பிட்டனர்.

இடதுசாரி ஆட்சி நடக்கும் கேரளாவில், முதல்-மந்திரி இல்லத்தில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி கட்காரி குடும்பத்தினருடன் விருந்து சாப்பிட்டது, சட்ட சபைக்கு சென்றது அரசியல் நாகரிகத்தை காட்டுவதாக அமைந்தது.