தேசிய செய்திகள்

விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளுக்கு வழங்கிய பணம் மீண்டும் அரசின் கணக்குக்கு மாற்றம் + "||" + Farmers were dismissed, The money paid to the farmers is again transferred to the account of the government

விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளுக்கு வழங்கிய பணம் மீண்டும் அரசின் கணக்குக்கு மாற்றம்

விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளுக்கு வழங்கிய பணம் மீண்டும் அரசின் கணக்குக்கு மாற்றம்
விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளுக்கு வழங்கிய பணம், மீண்டும் அரசின் கணக்குக்கு மாற்றப்பட்டது. இதனால் விவசாயிகள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சகாபுரா தாலுகா சாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பா. விவசாயி. இவர் விவசாயம் செய்வதற்காக சகாபுரா டவுனில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கி இருந்தார். இந்தநிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.


இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயி சிவப்பாவின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. ஒரு மாதம் கழித்து ரூ.43 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களில் சிவப்பாவின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.93 ஆயிரம் மீண்டும் அரசின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது. இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டு, பின்னர் அது அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அனைவரும் நேற்று காலை சகாபுரா டவுனில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மானாவாரி சம்பா நெல் சாகுபடிக்கு போதிய மழை இல்லை: டேங்கர் லாரி மூலம் நாற்றங்காலுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
வேதாரண்யம் அருகே மானாவாரி சம்பா நெல் சாகுபடிக்கு போதிய மழை இல்லாததால் நாற்றங்காலுக்கு டேங்கர் லாரி மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.
2. வரத்து வாய்க்காலை மூட எதிர்ப்பு 2-வது முறையாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
வரத்து வாய்க்காலை மூட எதிர்ப்பு தெரிவித்து 2-வது முறையாக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? நெல்லை கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்
தஞ்சை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? என நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். மழை பெய்தால் வீணாகிவிடும் என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
4. டெல்லியை நோக்கி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணி
டெல்லியை நோக்கி சுமார் 15 ஆயிரம் விவசாயிகள் பேரணியாக வந்தனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
5. சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் - கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை மனு
சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.