தேசிய செய்திகள்

‘மந்திரி பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை’ - நடிகை ரோஜா பேட்டி + "||" + 'No regret to get minister Post' - Actress Roja interview

‘மந்திரி பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை’ - நடிகை ரோஜா பேட்டி

‘மந்திரி பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை’ - நடிகை ரோஜா பேட்டி
மந்திரி பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
நகரி,

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன்ரெட்டி பதவி ஏற்றார். பின்னர் 5 துணை முதல்-மந்திரிகள் உள்பட 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.


இந்தநிலையில் ஆந்திராவில் இன்று (புதன்கிழமை) முதல்முறையாக சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக நடிகை ரோஜா விமானம் மூலம் விஜயவாடா வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மந்திரி பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை. ஜாதிகளின் அடிப்படையில் எனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மந்திரி பதவிக்காக சிவசேனா பிரமுகர் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்தார் - உறவினர் குற்றச்சாட்டால் பரபரப்பு
மராட்டியத்தில் மந்திரி பதவிக்காக சிவசேனா பிரமுகர் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக, உறவினர் கூறிய குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டது.