தேசிய செய்திகள்

யோகி ஆதித்யநாத்தை இழிவுபடுத்தியதாக கைதான பத்திரிகையாளருக்கு உடனடி ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Yogi Aditya Nath Disgracing the immediate bail for journalist arrested - Supreme Court directive

யோகி ஆதித்யநாத்தை இழிவுபடுத்தியதாக கைதான பத்திரிகையாளருக்கு உடனடி ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

யோகி ஆதித்யநாத்தை இழிவுபடுத்தியதாக கைதான பத்திரிகையாளருக்கு உடனடி ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
யோகி ஆதித்யநாத்தை இழிவுபடுத்தியதாக கைதான பத்திரிகையாளருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அலுவலகத்துக்கு முன்பு நின்றபடி, அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஒரு பெண் கூறிய வீடியோவை பிரசாந்த் கனோஜியா, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார். இதன்மூலம், யோகி ஆதித்யநாத்தின் நற்பெயரை களங்கப்படுத்தியதாக, பிரசாந்த் கனோஜியாவை உத்தரபிரதேச போலீசார் கைது செய்தனர். அவர் 11 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


இதற்கிடையே, கனோஜியாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி, அவருடைய மனைவி ஜிகிஷா, சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

இந்த வழக்கில் ஒருவர் 11 நாள் சிறையில் இருப்பதை அனுமதிக்க முடியாது. அதற்காக அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. கருத்து சுதந்திரம் என்பது அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை. அத்தகைய உரிமையை மாநில அரசு பறிப்பதை ஏற்க முடியாது. ஆகவே, அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அதே சமயத்தில், அவர் மீதான வழக்கு, சட்டப்படி நடக்கட்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. தோசை மாவு பிரச்சினையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் மளிகை கடைக்காரர் கைது
தோசை மாவு பிரச்சினையில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
2. மணப்பாறை அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரிப்பு 4 பேர் கைது
மணப்பாறை அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மண்ணச்சநல்லூர் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாகன விற்பனையாளர் கொலை வாலிபர் கைது
மண்ணச்சநல்லூர் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாகன விற்பனையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. தஞ்சை அருகே ரெயில் தண்டவாளத்தில் தீ வைத்த முதியவர் கைது
தஞ்சை அருகே ரெயில் தண்டவாளத்தில் தீ வைத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
5. திருச்சியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற ஐ.டி. நிறுவன ஊழியர் கைது
திருச்சியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற ஐ.டி. நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.