தேசிய செய்திகள்

லண்டன் சிறையில் இருக்கும் நிரவ் மோடிக்கு மும்பை சிறையில் அறை தயார் + "||" + To Nirav Modi in London in prison, Ready room in Mumbai jail

லண்டன் சிறையில் இருக்கும் நிரவ் மோடிக்கு மும்பை சிறையில் அறை தயார்

லண்டன் சிறையில் இருக்கும் நிரவ் மோடிக்கு மும்பை சிறையில் அறை தயார்
லண்டன் சிறையில் இருக்கும் நிரவ் மோடிக்கு, மும்பை சிறையில் அறை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு சென்ற இந்திய வைர வியாபாரி நிரவ் மோடி அங்கு கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் எந்த சிறையில் அடைக்கப்படுவார், அங்குள்ள வசதிகள் என்ன என்று லண்டன் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.


இதுதொடர்பாக மும்பை சிறை நிர்வாகம் மாநில உள்துறைக்கு ஒரு பதில் அனுப்பியுள்ளது. அதில், ஆர்தர் ரோடு சிறையில் 12-ம் எண் செல்லில் 2 அறைகள் உள்ளன. இதில் ஒன்று நிரவ் மோடிக்கு தயாராக உள்ளது. நிரவ் மோடி, விஜய் மல்லையா ஆகிய இருவரையும் கூட அந்த ஒரே அறையில் அடைக்கலாம். 20 அடிக்கு 15 அடி கொண்ட அந்த அறையில் 3 மின்விசிறிகள், 6 டியூப் லைட்டுகள், 2 ஜன்னல்கள் உள்ளன. நிரவ் மோடிக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் 3 சதுர மீட்டர் இடம் கிடைக்கும். ஐரோப்பிய விதிகளின்படி அவருக்கு பருத்தி மெத்தை, தலையணை, போர்வை, படுக்கை விரிப்பு ஆகியவை வழங்கப்படும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் புத்துணர்ச்சிக்காக அறைக்கு வெளியே அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே லண்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிரவ் மோடிக்கு 3 முறை ஜாமீன் மறுக்கப்பட்டதால், லண்டன் ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையிலா அடைப்பீர்கள்? - லண்டன் நீதிபதி கேள்வி
மும்பை சிறையில் நிரவ் மோடி மற்றும் மல்லையாவை ஒரே அறையிலா அடைப்பீர்கள் என லண்டன் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
2. தேர்தல் முடிந்த பின் நிரவ் மோடியை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவர்; காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேர்தலுக்காக இந்தியாவுக்கு கொண்டு வரும் நிரவ் மோடியை தேர்தலுக்கு பின் வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவர் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
3. பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் மோசடி; வங்கி அதிகாரிகள் உள்பட 10 பேரை சிபிஐ கைது செய்தது
ரூ.9 கோடி கடன் மோசடி தொடர்பாக வங்கி ஊழியர்கள் உள்பட 10 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.