தேசிய செய்திகள்

மோடியுடன் ஒடிசா முதல்-மந்திரி சந்திப்பு: ‘பானி’ புயல் பாதிப்பால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார் + "||" + Odisha Chief minister meeting with Modi: Demanded for 'Fani' storm attack is a special status for the state

மோடியுடன் ஒடிசா முதல்-மந்திரி சந்திப்பு: ‘பானி’ புயல் பாதிப்பால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார்

மோடியுடன் ஒடிசா முதல்-மந்திரி சந்திப்பு: ‘பானி’ புயல் பாதிப்பால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார்
பிரதமர் மோடியை ஒடிசா முதல்-மந்திரி நேற்று சந்தித்தார். அந்த சந்திப்பில் ‘பானி’ புயல் பாதிப்பால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

அதைத் தொடர்ந்து முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் கடந்த 29-ந்தேதி பதவி ஏற்றார்.


இந்த நிலையில் அவர் தலைநகர் டெல்லிக்கு நேற்று சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், “தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமரை பாராட்டினேன். சமீபத்திய பானி புயலால் பெரும்பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோடி: துலாபார பூக்களின் பின்னணி ரகசியங்கள்
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு குருவாயூர் கோவிலில் வழிபாடு செய்தார். அப்போது துலாபாரம் நடத்தி, தனது எடைக்கு எடை தாமரை பூக்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தார்.
2. மோடியும், இம்ரான்கானும் நலம் விசாரித்தனர்
கிர்கிஸ்தான் நாட்டில் பிஷ்கேக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
3. கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ரஷிய அதிபர் புதினையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
4. ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அமித்ஷா நேற்று சந்தித்தார்.
5. அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் சந்திப்பு - முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திடீரென்று டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.