மாநில செய்திகள்

சென்னையில் சைக்கோ கொலையாளி கைது + "||" + Psycho killer arrested

சென்னையில் சைக்கோ கொலையாளி கைது

சென்னையில் சைக்கோ கொலையாளி  கைது
சென்னை ரெட்டேரி பகுதியில் 2 பேரை கொடூரமாக கொன்ற சைகோ கொலையாளியை வில்லிவாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,

கடந்த மாதம் 26-ம் தேதி ரெட்டேரி பாலத்தின் அடியில் இரவில் படுத்திருந்த அசதுல்லா என்பவரை மர்ம நபர் கொடூரமாக தாக்கியதில் அவர் சிகிச்சை பலனினின்றி  இறந்தார்.

அதே போன்று கடந்த 2 ஆம் தேதி நாராயணபெருமாள் என்பவரை மர்ம நபர் தாக்கியுள்ளார். சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினர், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம ந்பர் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது.

லுங்கி அணிந்தபடி நடமாடும் அந்த நபர் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது மாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹருக்கோ தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த மர்ம ஆசாமியை பிடிக்க  தீவிர தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டனர். இந்நிலையில் கொடூர தாக்குதல் நடத்திய சைகோவை, வில்லிவாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மானாமதுரையை சேர்ந்த முனியசாமி (வயது 35) என தெரியவந்துள்ளது.