மாநில செய்திகள்

நடிகர் ராதாரவி அதிமுகவில் மீண்டும் இணைந்தார் + "||" + Actor Radharavi rejoined the ADMK

நடிகர் ராதாரவி அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

நடிகர் ராதாரவி அதிமுகவில் மீண்டும் இணைந்தார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நடிகர் ராதாரவி அதிமுகவில் இணைந்தார்.
சென்னை,

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் நடிகர் ராதாரவி இணைந்தார். ராதாரவி அதிமுகவில் இணைந்தபோது அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார். 

நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக பேசியதால் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் ராதாரவி என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் கடந்த மார்ச் 25-ம் தேதி  தெரிவித்தது நினைவுகூறத்தக்கது.

அதிமுகவில் இணைந்த பின் நடிகர் ராதாரவி நிருபர்களிடம் கூறுகையில்,

அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கர்கள் இல்லை என்றால், தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும் - நடிகர் ராதாரவி
தெலுங்கர்கள் இல்லை என்றால், தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும் என்றும் தாம் தெலுங்கர் என்பதில் பெருமை கொள்வதாகவும் நடிகர் ராதாரவி கூறினார்.