மாநில செய்திகள்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு + "||" + AIADMK Counseling meeting in the head office is completed

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.
சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.  இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள், கட்சி தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டது.

இக்கூட்டத்தில் உடல்நல குறைவால் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை.  அவர் கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதேபோன்று கூட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.  அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை என எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு  ஆகிய 3 பேரும் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், சி.வி. சண்முகம் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை.  கூட்டத்தில் நிர்வாகிகள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.  ஒன்றரை மணிநேரம் நடந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.  மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்வி பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மிக பெரிய வெற்றி பெற வேண்டுமென்றும், இதற்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென்றும் தொண்டர்கள், கட்சியினர், நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை கூட்டம்; அ.தி.மு.க. பங்கேற்கவில்லை
பிரதமர் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கவில்லை.
2. அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை: தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து
பரமத்தி வேலூரில் நடைபெற இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
3. அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
4. மலை கிராமங்களில் தடையில்லாமல் வாக்கு அளிக்க தேவையான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் தடையில்லாமல் வாக்கு அளிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.
5. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக-ஆந்திர மாநில போலீசார் ஆலோசனை கூட்டம் பர்கூரில் நடந்தது
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக-ஆந்திர மாநில போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பர்கூரில் நடந்தது.