மாநில செய்திகள்

அதிமுக ஆலோசனை கூட்டம்: சிரித்தபடி உள்ளே சென்றோம், சிரித்தபடி வெளியே வந்தோம் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி + "||" + AIADM consultative meeting RajendraBalaji

அதிமுக ஆலோசனை கூட்டம்: சிரித்தபடி உள்ளே சென்றோம், சிரித்தபடி வெளியே வந்தோம் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுக ஆலோசனை கூட்டம்: சிரித்தபடி உள்ளே சென்றோம், சிரித்தபடி வெளியே வந்தோம் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
எப்படி சிரித்தபடி உள்ளே சென்று கூட்டத்தில் பங்கேற்றோமோ, அப்படியே சிரித்தபடி வெளியே வந்தோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக  நிர்வாகிகள் கூட்டம் நிறைவு பெற்றது. தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட  செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. உள்ளாட்சித்தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை. அதிமுக பொதுக்குழு குறித்து முதலமைச்சர் துணை  முதலமைச்சர் முடிவெடுப்பார்கள்.

தேர்தல் முடிவு மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசினோம்.  எப்படி சிரித்தபடி உள்ளே சென்று கூட்டத்தில் பங்கேற்றோமோ, அப்படியே சிரித்தபடி வெளியே வந்தோம். ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. “முஸ்லிம்கள் குறித்து தவறாக பேசவில்லை” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்
“முஸ்லிம்கள் குறித்து தவறாக பேசவில்லை“ என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்தார். இதுகுறித்து நாங்குநேரி தொகுதி கருவேலங்குளம் கிராமத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2. நாங்குநேரி தொகுதியில் “அ.தி.மு.க. வெற்றியை தடுக்க தி.மு.க. பல வழிகளில் செயல்படுகிறது” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு
நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றியை தடுக்க தி.மு.க. பல வழிகளில் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார்.
3. கருணாநிதிக்கு இடம் கேட்ட தி.மு.க., மெரினாவில் காமராஜருக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன்? - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்ட தி.மு.க., காமராஜருக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன்? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார்.
4. அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஆவணங்களை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்தது தமிழக அரசு.
5. பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.