மாநில செய்திகள்

அடுத்த அறிவிப்பு வரும்வரை ஊடகத்திற்கு கருத்துகூற அ.தி.மு.க.வினருக்கு தடை; தலைமை அறிவிப்பு + "||" + The AIADMK has been banned to comment on the media until the next announcement; Chief Announcement

அடுத்த அறிவிப்பு வரும்வரை ஊடகத்திற்கு கருத்துகூற அ.தி.மு.க.வினருக்கு தடை; தலைமை அறிவிப்பு

அடுத்த அறிவிப்பு வரும்வரை ஊடகத்திற்கு கருத்துகூற அ.தி.மு.க.வினருக்கு தடை; தலைமை அறிவிப்பு
அடுத்த அறிவிப்பு வரும்வரை எந்த ஊடகத்திற்கும், பத்திரிகைக்கும் அ.தி.மு.க.வினர் கருத்துகூற வேண்டாம் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.  இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள், கட்சி தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என கூறப்பட்டது.

இதன்பின் கூட்ட நிறைவில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இந்நிலையில், நாடாளுமன்ற பொது தேர்தல் முடிந்து அடுத்த கட்ட அரசியல் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த அறிவிப்பு வரும்வரை எந்த ஊடகத்திற்கும், பத்திரிகைக்கும் அ.தி.மு.க.வினர் கருத்துகூற வேண்டாம் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இதனை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் திட்டம் விரிவாக்கம்; விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டு ரூ.6 ஆயிரம் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதால் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.
2. அங்கீகாரம் இன்றி செயல்படும் 18 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் கலெக்டர் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்படும் 18 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
3. 8 நாடுகள் ஆக்கி: இந்திய அணி அறிவிப்பு
8 நாடுகள் இடையே நடைபெற உள்ள ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
4. முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. #AnnaUniversity
5. அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.