தேசிய செய்திகள்

ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது, சந்திரயான்-2 + "||" + The cost of Chandrayaan 2 Mission mainly the satellite portion

ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது, சந்திரயான்-2

ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது, சந்திரயான்-2
சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா,

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ரூ.800 கோடியில் சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து உள்ளது.

இதில் முதல் முறையாக நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் ரோவர் ஆய்வு வாகனம் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனம் நிலவின் தென்துருவமுனை பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இப்பகுதியில் இதுவரை எந்தவொரு நாடும் ஆய்வு செய்ததில்லை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்த சந்திரயான்-2 விண்கலம் பல்வேறு காரணங்களால் பலமுறை  ஒத்திவைக்கப்பட்டது. இந்த விண்கலம் ஜூலை மாதம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்து இருந்தது.

இந்தநிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:- சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ம் தேதி அதிகாலை 2.51-க்கு விண்ணில் செலுத்தப்படும். சந்திராயன்-2  3.8 டன் எடை கொண்டது ஆகும் என்றார்.

தற்போது இஸ்ரோவுக்கு சொந்தமான 49 செயற்கைகோள்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அதில் 18 செயற்கைகோள்கள் பூமி கண்காணிப்பு பணியை மட்டும் செய்து வருகிறது. இவற்றின் மூலம்தான்  புயல் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்கள் உரிய நேரத்தில் பெறப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பின்னடைவு தற்காலிகமானதே... புதிய சாதனைகளை படைப்போம் -தலைவர்கள் பாராட்டு
சந்திரயான்-2 பின்னடைவு தற்காலிகமானதே... புதிய சாதனைகளை படைப்போம் என்று தலைவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
2. சந்திரயான்-2 தரையிறங்குவதில் பின்னடைவு -பாகிஸ்தான் மந்திரி கிண்டல்
சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிரங்குவதற்குள் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டதை பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி பகத் உசேன் கிண்டல் செய்துள்ளார்.
3. சந்திரயான் 2 நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3-ஆவது நிலைக்கு முன்னேறி உள்ளது
சந்திரயான் 2 நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3-ஆவது நிலைக்கு முன்னேறி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
4. நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது சந்திரயான்-2
புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் 2 தொடங்கியது
5. 5-வது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்-2
சந்திரயான்-2 விண்கலம் 5-வது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.