கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு + "||" + Australia vs Pakistan

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு
உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
டவுன்டான், 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 14-வது நாளான இன்று (புதன்கிழமை) டவுன்டானில் நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் 15 ரன்  வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசையும் தோற்கடித்தது. 3-வது லீக் ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது.

இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாற்றத்தை சந்தித்தனர். வழக்கமான அந்த அணியின் அதிரடி ஆட்டத்தை காண முடியவில்லை. உலகக்கோப்பை போட்டியில் 1999-ம் ஆண்டுக்கு பிறகு சேசிங்கில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது  இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சும் மெச்சும்படியாக அமையவில்லை. முந்தைய ஆட்டத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு வர 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும்.

பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு 14 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. இலங்கைக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர நேர்த்தியாக செயல்பட்டது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் ஆக்ரோஷமாக விளையாடுவோம் என்று பாகிஸ்தான் அணி சூளுரைத்துள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 15 ஒரு நாள் போட்டியில் 14-ல் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில்  பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸ்  வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபாரஸ் அகமது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.