தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைப்பு + "||" + BJP Parliamentary Party Executive Committee has been constituted

பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைப்பு

பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. மோடி  மீண்டும் பிரதமராக 2-வது முறையாக பதவி  ஏற்றுக்கொண்டார்.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழு தலைவராக மோடியும், தேசிய தலைவராக அமித்ஷாவும் தொடர்கிறார்கள். மக்களவை துணை  தலைவராக ராஜ்நாத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை தலைவராக தாவர்சந்த் கெலாட்டும், மாநிலங்களவை துணை தலைவராக பியூஷ் கோயலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு  கொறடாவாக பிரகலாத் ஜோஷி, அரசு துணை கொறடாவாக மக்களவைக்கு அர்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களவைக்கு முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ள டெல்லியில் 19–ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
2. குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்
குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நிலையில் 3 மகள்களுடன் தற்கொலை செய்ய உள்ளேன், அனுமதியுங்கள் என விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
3. ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் -பிரதமர் மோடி
ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
4. பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு
பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசினார்.
5. பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று சேர்ந்து போரிடுவோம் : ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு
பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போரிடுவோம் என்று ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.