கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் வெற்றி இலக்கு + "||" + Australia Pakistan ICC World Cup 2019 Amirs fifer keeps Australia to 307 despite Warners ton

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் வெற்றி இலக்கு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் வெற்றி இலக்கு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு 308 ரன்களை ஆஸ்திரேலியா வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 14-வது நாளான இன்று டவுன்டானில் நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசையும் தோற்கடித்தது. 3-வது லீக் ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. 

பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு 14 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. இலங்கைக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர நேர்த்தியாக செயல்பட்டது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் ஆக்ரோஷமாக விளையாடுவோம் என்று பாகிஸ்தான் அணி சூளுரைத்துள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற நிலையில் ஆட்டம் தொடங்கியது.

டவுன்டானில் இன்று வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணியால் 22 ஓவர்கள் வரையில் விக்கெட்டு எடுக்க முடியவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலியா ரன் குவிப்பதை தடுக்க முயற்சி செய்தது.  22.1 வது ஓவரில் ஆரோன் பிஞ்ச் 82 ரன்களில் அவுட் ஆனார். டேவிட் வார்னர் 107 ரன்கள் அடித்து  28.4 வது ஓவரில் அவுட் ஆனார். இதற்கு அடுத்து வரிசையாக களமிறங்கிய பேட்ஸ்மேன்களை அதிகமாக ரன் எடுக்க பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை. ஆட்டத்தை 49 ஓவர்கள் வரையில் அனுமதித்த பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்தது. ஆஸ்திரேலியாவும் 307 ரன்களை எடுத்தது. இதனால் 308 ரன்கள் பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் அதிகப்பட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் ஹபீஸ் சயீத் உள்பட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர வேண்டும் -அமெரிக்கா
பாகிஸ்தான் ஹபீஸ் சயீத் உள்பட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பணியகத்தின் தலைவர் ஆலிஸ் வெல்ஸ் கூறி உள்ளார்.
2. சர்வதேச பயங்கரவாத தடுப்பு அமைப்பிடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் -அஜித் தோவல்
சர்வதேச பயங்கரவாத தடுப்பு அமைப்பிடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று அஜித் தோவல் தெரிவித்தார்.
3. பாகிஸ்தானில் ராணுவத்தின் கை ஓங்குகிறது? தலையாட்டி பொம்மையாகும் இம்ரான்கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் சீனாவுக்கு சென்ற ராணுவத் தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, ராணுவத்தின் அதிகார மையத்தை உறுதி செய்துள்ளார்.
4. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணியிடம் பாகிஸ்தான் மீண்டும் தோல்வி
3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியிடம் பாகிஸ்தான் மீண்டும் தோல்வியடைந்தது.
5. அரசியல் லாபங்களுக்காக பெண்கள் உரிமை பிரச்சினைகளை ஆயுதமாக்கிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் அரசியல் லாபங்களுக்காக பெண்கள் உரிமை பிரச்சினைகளை ஆயுதமாக்கிய பாகிஸ்தானை இந்தியா கண்டித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...