தேசிய செய்திகள்

டெல்லி: புழுதிப்புயல் வீசியதால் விமான சேவை நிறுத்தம் + "||" + New Delhi: Stop Aviation service due to dust Storm

டெல்லி: புழுதிப்புயல் வீசியதால் விமான சேவை நிறுத்தம்

டெல்லி: புழுதிப்புயல் வீசியதால் விமான சேவை நிறுத்தம்
டெல்லியில் திடீரென ஏற்பட்ட புழுதிப்புயலால் விமான சேவை நிறுத்தப்பட்டது.
புதுடெல்லி,

டெல்லியில் இன்று மாலை திடீரென புழுதிப்புயல் வீசியது. இந்த புயல் டெல்லியின் பல்வேறு பகுதிகளை தாக்கியது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த புழுதிப்புயல் டெல்லி விமான நிலையத்தை இன்று மாலை 6.39 மணிக்கு தாக்கியது. 


புழுதிப்புயல் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மாலையில் சுமார் 35 நிமிட நேரம் விமான சேவை  நிறுத்தி வைக்கப்பட்டது. 27 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. பின்னர் இரவு 7.15 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் வழக்கம்போல் விமான சேவை மீண்டும் தொடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: வறட்சியை சமாளிக்க துரித நடவடிக்கை - முதல்-மந்திரிகளுக்கு மோடி வேண்டுகோள்
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவும், வறட்சியை சமாளிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் முதல்-மந்திரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
2. உத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் பலியாகினர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
3. டெல்லியில் ராகுல் காந்தியுடன் தேவேகவுடா சந்திப்பு: கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார்
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்த தேவேகவுடா, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார் தெரிவித்தார்.
4. டெல்லியில் வாட்டி வதைக்கும் வெயில் - 118 டிகிரி பதிவானது
டெல்லியில் வாட்டி வதைக்கும் வெயிலின் அளவு, அதிகபட்சமாக அங்கு 118 டிகிரி பதிவானது.
5. டெல்லியில் மது விருந்து - 3 பேர் கைது
டெல்லியில் மது விருந்து நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.