தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை + "||" + Terror in Uttar Pradesh: Head of the Bar Council shot dead

உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை

உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில், பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆக்ரா,

உத்தரபிரதேச பார் கவுன்சில் தலைவராக தர்வேஷ் யாதவ் என்ற பெண் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். நேற்று மாலை இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வக்கீல் அரவிந்த்குமார் மிஸ்ரா அறையில் மூத்த வக்கீல் மனீஷ் சர்மா என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வக்கீல் மனீஷ் சர்மா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பார் கவுன்சில் தலைவரான தர்வேஷ்யாதவை சரமாரியாக சுட்டார். இதில் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மனிஷ்சர்மா துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் காயம் அடைந்து அவர் உயிருக்கு போராடினார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்தில் பயங்கரம்: விமானங்கள் நேருக்கு நேர் மோதல்; 2 விமானிகள் பலி
நியூசிலாந்தில் விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 விமானிகள் பலியாயினர்.
2. மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை கத்தியால் குத்திய தந்தை, போலீஸ் விசாரணை
மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை தந்தையொருவர் கத்தியால் குத்திய சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது.
3. உ.பி.யில் பயங்கரம்: இரண்டு சகோதரிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்
உத்தரபிரதேச மாநிலம் முசாப்பர்நகரில் இரண்டு சகோதரிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
4. உத்தரபிரதேசத்தில் இருந்து ரெயிலில் திரும்பிய போது தமிழகத்தை சேர்ந்த 5 பேர் வெயிலுக்கு பலி - உருக்கமான தகவல்கள்
உத்தரபிரதேசத்துக்கு சுற்றுலா சென்று விட்டு ரெயிலில் திரும்பிய போது தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கடும் வெயில் காரணமாக பரிதாபமாக இறந்தனர்.
5. உ.பி.யில் மீண்டும் ஆன்டி-ரோமியோ படையை கொண்டுவர யோகி ஆதித்யநாத் உத்தரவு
உ.பி.யில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய ஆண்களை தொடர்ச்சியாக கண்காணிக்க போலீசுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.