உலக செய்திகள்

இந்தியாவுடனான வர்த்தக வேற்றுமைகளை தீர்க்க வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தயார்; அமெரிக்கா + "||" + US is open for dialogue with India over trade differences: Pompeo

இந்தியாவுடனான வர்த்தக வேற்றுமைகளை தீர்க்க வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தயார்; அமெரிக்கா

இந்தியாவுடனான வர்த்தக வேற்றுமைகளை தீர்க்க வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தயார்; அமெரிக்கா
இந்தியாவுடனான வர்த்தக வேற்றுமைகளை தீர்த்து கொள்ள வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா கூறியுள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தி அடைந்து இருக்கிறார்.  இதுபற்றி அவர் அளித்த பேட்டியொன்றில், பிரதமர் நரேந்திர மோடி எனது நல்ல நண்பர். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்?

அமெரிக்க மோட்டார் சைக்கிள் மீது 100 சதவீத வரி விதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏராளமாக மோட்டார் சைக்கிள்களை தயாரித்து இங்கே அனுப்புகிறார்கள். அவற்றின் மீது நாம் வரி போடுவதில்லை.

எனவே நான் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து இதுபற்றி பேசினேன். இதை ஏற்க முடியாது என்று சொன்னேன். அந்த தொலைபேசி அழைப்பால் 50 சதவீத வரியை குறைப்பதாக மோடி கூறினார். ஆனால் இதையும் ஏற்க முடியாது, ஏனென்றால் நாம் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை என்பதை குறிப்பிட்டேன். இப்போதும் அதை ஏற்க முடியாது. அவர்கள் இதை பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லாரும் கொள்ளையடிக்க விரும்புகிற வங்கி போல அமெரிக்கா இருக்கிறது. இதைத்தான் அனைவரும் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளால் நமக்கு 800 பில்லியன் டாலர் (சுமார் ரூ.56 லட்சம் கோடி) வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது என கூறினார்.

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ, இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு வருகிற 24ந்தேதி முதல் 30ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை பற்றி பேசிய அவர், வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தொடர்ந்து தயாராக இருக்கிறோம்.  இந்தியாவில் உள்ள எங்களுடைய நண்பர்கள் வர்த்தக தடைகளை கைவிடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்.  வர்த்தக போட்டியில் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்று கூறினார்.  என்னுடைய இந்திய வருகையில், ஜி.எஸ்.பி. முடிவு பற்றி ஆலோசிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இதேபோன்று இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு உறவுகள் பற்றி பேசிய அவர், எங்களுடைய பாதுகாப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டு உள்ளன.  பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தகவல்
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
2. என்னை மீண்டும் ஜனாதிபதி ஆக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் - தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதி
தன்னை மீண்டும் ஜனாதிபதி ஆக்கினால் அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் என ஜனாதிபதி டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
3. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு
இரண்டாம் உலகப்போர் 1939-1945 ஆண்டுகளில் நடைபெற்றது. அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரில் அமெரிக்கா போட்ட 100 கிலோ எடை கொண்ட ராட்சத வெடிகுண்டு வெடிக்காத நிலையில் அலெக்சாண்டர்பிளாட்ஸ் சதுக்கத்தில் கண்டெடுக்கப்பட்டது.
4. வர்த்தக ரீதியாக இப்போதைக்கு இந்தியாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை -அமெரிக்கா
வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு எதிராக இப்போதைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
5. ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு
ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் தான் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...