தேசிய செய்திகள்

வாயு புயலால் குஜராத்தில் பாதிப்பு ஏற்படாது; இந்திய வானிலை ஆய்வு மையம் + "||" + Cyclone Vayu won't hit Gujarat: IMD

வாயு புயலால் குஜராத்தில் பாதிப்பு ஏற்படாது; இந்திய வானிலை ஆய்வு மையம்

வாயு புயலால் குஜராத்தில் பாதிப்பு ஏற்படாது; இந்திய வானிலை ஆய்வு மையம்
வாயு புயலால் குஜராத்தில் பாதிப்பு ஏற்படாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தில் இன்று காலை கரையை கடக்கிறது. அப்போது 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

புயல் பாதிக்கும் 10 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 400 கிராமங்களை சேர்ந்த 2.91 லட்சம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையின் 36 கம்பெனி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 10 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. முப்படைகளும், கடலோர காவல்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி மனோரமா மொகந்தி அகமதாபாத் நகரில் கூறும்பொழுது, வாயு புயலால் குஜராத்தில் பாதிப்பு ஏற்படாது.  அது வெராவல், போர்பந்தர், துவாரகா நகர் வழியே கடந்து செல்லும்.  வேகமுடன் பலத்த காற்று வீசும்.  கனமழையும் பெய்ய கூடும்.

கடலோர பகுதிகளில் இதன் தாக்கம் காணப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘வாயு’ புயல் மீண்டும் பாதை மாறியது: குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு
அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தின் கட்ச் பகுதியை நாளை அல்லது மறுநாள் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
2. பாதை மாறியது ‘வாயு’ புயல் : தப்பியது குஜராத்
அரபிக்கடலில் உருவான வாயு புயல், பாதை மாறிச் செல்வதால் குஜராத் தப்பியது.
3. ஓமனை நோக்கி நகர்ந்தது வாயு புயல்: 24 மணி நேரம் கண்கானிக்க விஜய் ரூபானி உத்தரவு
குஜராத்தை அச்சுறுத்த வந்த வாயு புயல் திசை மாறி ஓமனை நோக்கி நகர்ந்தது.
4. மராட்டியத்தை மிரட்டிய ‘வாயு’ புயல் : பால்கரில் பெரும் விபத்து தவிர்ப்பு
வாயு புயல் மராட்டியத்தை மிரட்டி சென்றது. பால்கர் மாவட்டத்தில் ரெயில்வே பாலத்தில் இருந்த கான்கிரீட் சாரம் சரிந்தது. அந்த நேரம் ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
5. ‘வாயு’ புயல் எச்சரிக்கை: குஜராத்தில் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
குஜராத் மாநிலத்தில் ‘வாயு’ புயல் இன்று கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...