தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் ஜூன் 16ந்தேதி காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது + "||" + All party meet in Parliament on the morning of 16 June

நாடாளுமன்றத்தில் ஜூன் 16ந்தேதி காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது

நாடாளுமன்றத்தில் ஜூன் 16ந்தேதி காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது
நாடாளுமன்றத்தில் ஜூன் 16ந்தேதி காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை 2வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 17ந்தேதி தொடங்குகிறது.

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 38க்கும் மேற்பட்ட சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பது, முத்தலாக் தடை உள்பட முக்கியமான பிரச்சினைகளுக்காக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இதுபற்றி நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரலாத் ஜோஷி இன்று கூறும்பொழுது, நாடாளுமன்றத்தில் வருகிற ஜூன் 16ந்தேதி காலை நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தொடரில், முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள அன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான கூட்டமும் நடைபெறும்.

இதேபோன்று பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி நிர்வாக குழு கூட்டமும் அன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கனடா நாடாளுமன்றம் கலைப்பு; பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நடவடிக்கை
கனடா நாடாளுமன்றத்தினை கலைத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ உத்தரவிட்டு உள்ளார்.
2. பிரிட்டன்: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார்.
3. நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல்
நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
4. நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றிய நேருவின் உரை
1952-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றி ஜவகர்லால் நேரு உரையாற்றினார்.
5. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நீட்டிக்கப்படலாம் என தகவல்
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.