தேசிய செய்திகள்

அமித்ஷா தலைமையில் பாரதீய ஜனதா மாநில தலைவர்கள் கூட்டம் தொடங்கியது + "||" + BJP President Amit Shah arrives at the BJP headquarters for the meeting of party national office bearers and state-heads

அமித்ஷா தலைமையில் பாரதீய ஜனதா மாநில தலைவர்கள் கூட்டம் தொடங்கியது

அமித்ஷா தலைமையில் பாரதீய ஜனதா  மாநில தலைவர்கள் கூட்டம் தொடங்கியது
டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதீய ஜனதா மாநில தலைவர்கள் கூட்டம் தொடங்கியது.
புதுடெல்லி,

டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதீய ஜனதா  மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். மேலும் பாஜக உட்கட்சி தேர்தலும் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர்கள் கூட்டம் டெல்லியில் அக்கட்சித் தலைமையகத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதில் பாஜக அமைப்புத் தேர்தல், புதிய தலைவர் தேர்வு, கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 18-ம் தேதி பாஜக பொதுச்செயலாளர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் விமானத்துக்கு பூஜை: விமர்சனம் செய்த காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்
ரபேல் விமானத்துக்கு பூஜை செய்த விவகாரத்க்தில் எதை விமர்சிக்க வேண்டும், எது விமர்சிக்க கூடாது என்பதை சிந்திக்க வேண்டும் காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
2. இந்தி மொழி விவகாரம்: எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது - அமித்ஷா விளக்கம்
எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என இந்தி மொழி விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
3. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து
சர்வதேச அளவில் நாட்டை அடையாளப்படுத்த இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை மந்திரி அமித்‌ஷா கூறியுள்ளார்.
4. உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - அமித்ஷா ஆவேசம்
உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக பேசினார்.
5. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்க முடிவு; மாநிலங்களவையில் அமித் ஷா அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரை 2 யூனியன்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மாநிலங்களவையில் அமித் ஷா அறிவித்தார்.