மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை -டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல் + "||" + Asked for Group 1 exam 24 questions in the 200 questions are wrong TNPSC approved

குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை -டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்

குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை -டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்
குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி கூறி உள்ளது.
சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.

அதில், சப் கலெக்டர்- 27, துணை போலீஸ் சூப்பிரண்டு- 90, வணிகவரி உதவி கமிஷனர்-18, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்- 13, மாவட்ட பதிவாளர் - 7, கிராம மேம்பாடு உதவி இயக்குனர்- 15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 8, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர்- 3 ஆகிய 181 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இந்த 181 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும்  மார்ச் 03-ம் தேதி  நடைபெற்றது. 32 மாவட்ட தலைநகரங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டு 773 இடங்களில் இந்த தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 156 இடங்களில் தேர்வு நடைபெற்றது. அதில் 48 ஆயிரத்து 652 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.

இந்நிலையில், இந்த 181 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. முதன்மை தேர்வுக்கு 9850 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என  சென்னை ஐகோர்ட்டில்  டிஎன்பிஎஸ்சி கூறி உள்ளது. கேள்விகள் தவறானவை என்பது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ் சி அவகாசம் கோரியது.

முக்கியத்துவமான டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது. 17-ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வெண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு ஏ.பி.சாஹி பெயர் பரிந்துரை
பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சென்னை ஐகோர்ட்டுக்கு பணியிடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
2. பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
3. அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் வாங்கிய விவகாரம் : சி.பி.ஐ வளையத்தில் தஹில் ரமானி?
சென்னை ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம் - மத்திய அரசு தகவல்
சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
5. நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை- சென்னை ஐகோர்ட்
நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என கூறி ஜான் சார்லஸ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்.