தேசிய செய்திகள்

காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழப்பு -அதிகாரப்பூர்வ அறிவிப்பு + "||" + Indian Air Force: IAF pays tribute to the brave air-warriors who lost their lives during the AN32 aircraft crash on 3 Jun 2019 and stands by with the families of the victims. May their souls rest in peace.

காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழப்பு -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழப்பு -அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,

13 பேருடன் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானம் ஜூன் 3-ம் தேதி மதியம் 12.25 மணி அளவில் காணாமல் போனது. காணாமல் போன      விமானத்தை கண்டுபிடிக்க விமானப்படை விமானங்கள், ராணுவம், மலைவாழ் மக்கள் உதவியுடன் ஒரு வாரமாக தேடும்பணி நடைபெற்றது.  காணாமல் போன விமானத்தை கண்டறிவதில் மோசமான வானிலை காரணமாக சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், அருணாச்சலப்பிரதேசம் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே சிதைந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

விமானம் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படையும் உறுதி செய்துள்ளது. அதில் பயணம் செய்த 13 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்து உள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய விமானப்படை தாக்குதலில் 170 பயங்கரவாதிகள் சாவு - இத்தாலி செய்தியாளர்
இந்திய விமானப்படை தாக்குதலில் 170 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என இத்தாலி செய்தியாளர் பிரான்சிஸ்கா மாரினோ கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...