உலக செய்திகள்

யுனிசெஃப் அமைப்பின் மனிதாபிமான விருதுக்கு பிரியங்கா சோப்ரா தேர்வு + "||" + Priyanka Chopra to be Honoured with UNICEFs Humanitarian Award

யுனிசெஃப் அமைப்பின் மனிதாபிமான விருதுக்கு பிரியங்கா சோப்ரா தேர்வு

யுனிசெஃப் அமைப்பின் மனிதாபிமான விருதுக்கு பிரியங்கா சோப்ரா தேர்வு
யுனிசெஃப் அமைப்பின் மனிதாபிமான விருதுக்கு இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ரா 2006-ம் ஆண்டிலிருந்து ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா பணியாற்றினார். சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை உள்ளிட்ட விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இப்போது யுனிசெஃப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்படுள்ளார். இந்த விருது வழங்கும் விழா டிசம்பர் 3-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.

விருதுக்கு தேர்வானது தொடர்பாக பிரியங்கா சோப்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். டானி கே மனிதாபிமான விருது வழங்கி கவுரவித்த யுனிசெஃப் அமைப்புக்கு மிக்க நன்றி. யுனிசெஃப்பின் சார்பாக குழந்தைகளுக்கு நான் செய்யும் சேவை எனக்கு  எல்லாவற்றையும் விட முக்கியமானது. ஒவ்வொரு குழந்தையின் அமைதியான எதிர்காலம், சுதந்திரம் மற்றும்  கல்வி உரிமைக்காக (இந்த விருது போய் சேரட்டும்) எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. “ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை” - பிரியங்கா சோப்ரா
ஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன் வரிசையில் 25-வது படமாக நோ டைம் டூ டை தயாராகிறது.
2. ‘‘பெண்களை சுதந்திரமாக வளருங்கள்’’ –பிரியங்கா சோப்ரா
பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தால் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.
3. யுனிசெப் நல்லெண்ண தூதர்: பிரியங்கா சோப்ராவை நீக்க கோரி பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி
யுனிசெப் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ராவை நீக்குவதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
4. இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வெளியிட பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.1.86 கோடி
பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக்ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். இந்தி, ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
5. குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதல் திருமணம் செய்துள்ள இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.