தேசிய செய்திகள்

பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர்கிறார் + "||" + Amit Shah replaces Amit Shah for now, new BJP chief likely by next year

பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர்கிறார்

பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர்கிறார்
பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடருவார் என மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

அமித்ஷா தலைமையில் பாரதீய ஜனதா  மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் டெல்லியில் அக்கட்சித் தலைமையகத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனைத்து மாநில பாஜக தலைவர்களும் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடந்தது.

அப்போது லோக்சபா தேர்தலில பாஜக 303 இடங்களில் வெற்றி பெற அமித்ஷாவே காரணம் என்பதால் அவரே தொடர வேண்டும் என அனைத்து மாநில தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர் இதையடுத்து பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடருவார் என பாஜக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து அமித்ஷாவே தலைவராக இருக்க முடிவு எடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அமித்ஷா தலைமையில் பாரதீய ஜனதா மாநில தலைவர்கள் கூட்டம் தொடங்கியது
டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதீய ஜனதா மாநில தலைவர்கள் கூட்டம் தொடங்கியது.
2. மாற்றி அமைக்கப்பட்ட 8 மத்திய அமைச்சரவை குழுக்களிலும் இடம் பெற்ற அமித்ஷா
8 மத்திய அமைச்சரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து குழுக்களிலும் அமித்ஷா இடம் பெற்று உள்ளார்.
3. பெண்ணை எட்டி உதைத்த பாஜக எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டார்
குஜராத்தில் எம்.எல்.ஏ. ஒருவர் பெண்ணை எட்டி உதைக்கும் வீடியோ வைரலான நிலையில், அவர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
4. மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதால் அமித் ஷா, ஸ்மிரிதி இரானி, கனிமொழி மாநிலங்களவை எம்.பி. பதவி முடிந்தது
மக்களவைக்கு அமித் ஷா, ஸ்மிரிதி இரானி, ரவிசங்கர் பிரசாத், கனிமொழி ஆகியோர் மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதால், அவர்களின் மாநிலங்களவை எம்.பி. பதவி முடிவுக்கு வந்துள்ளது.
5. மம்தா பானர்ஜி 'பாஜக பேரணியை தடை செய்யலாம்' ஆனால் வெற்றியை தடை செய்ய முடியாது - அமித் ஷா
மேற்கு வங்காளத்தில் பாஜக பேரணியை மம்தா பானர்ஜி தடை செய்யலாம். ஆனால் வெற்றியை தடை செய்ய முடியாது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.