தேசிய செய்திகள்

உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை + "||" + Striking Doctors Set Terms After Mamata Banerjee's Ultimatum

உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை
கொல்கத்தாவில், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா,

கொல்கத்தாவில், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில், அண்மையில் நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள் மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்து இளநிலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஜூனியர் மருத்துவர்களை நேரில் சந்தித்த மம்தா பானர்ஜி, பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார். எனினும் மருத்துவர்கள் 'தங்களுக்கு நியாயம் வேண்டும்' என குரல் எழுப்பி போராட்டத்தை கைவிட மறுத்தனர். அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல் திறந்திருக்கும். எனினும், மருத்துவர்களின் வருகை குறைவால் அந்த சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பிற்பகல் 2 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். ஆனால், மம்தா பானர்ஜியின் கோரிக்கையை நிராகரித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு
கொல்கத்தாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.
2. கொல்கத்தா விமான நிலையத்தில் நேரிட்ட விபத்தில் ஸ்பைஸ் ஜெட் ஊழியர் உயிரிழப்பு
கொல்கத்தா விமான நிலையத்தில் நேரிட்ட விபத்தில் ஸ்பைஸ் ஜெட் ஊழியர் உயிரிழந்தார்.
3. கொல்கத்தாவில் மோதல்: போலீஸ் துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா தொண்டர்கள் 2 பேர் காயம் - திரிணாமுல் காங்கிரஸ், போலீஸ் மறுப்பு
கொல்கத்தாவில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா தொண்டர்கள் 2 பேர் காயம் அடைந்ததாக கூறப்பட்ட சம்பவத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
4. கொல்கத்தா அருகே இருதரப்பு இடையே மோதல் : இருவர் உயிரிழப்பு ; மம்தா பானர்ஜி அவசரக் கூட்டம்
கொல்கத்தா அருகே இருதரப்பு இடையே மோதல் நேரிட்டதில் இருவர் உயிரிழந்தனர். இதனையடுத்து அவசரக் கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
5. கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு கடிதம்
கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.