உலக செய்திகள்

இலங்கையில் புதிய உளவுத்துறை தலைவர் நியமனம் + "||" + Sri Lanka appoints new intelligence chief after Easter attacks probe row

இலங்கையில் புதிய உளவுத்துறை தலைவர் நியமனம்

இலங்கையில் புதிய உளவுத்துறை தலைவர் நியமனம்
இலங்கையில் புதிய உளவுத்துறை தலைவராக ருவன் குலதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு,

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.  இந்த தாக்குதல்களில் 258 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் பற்றி விசாரிக்க இலங்கையின் பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழு முன்பு, வாக்குமூலம் அளித்த இலங்கை உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ், ஏப்ரல் 21-இல் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலை தடுத்து இருக்கலாம் எனவும், பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்த போதும், தொடர் பாதுகாப்பு ஆலோசனைகளை மேற்கொள்ள அதிபர் சிறிசேனா தவறிவிட்டார் என்று கூறியிருந்தார்.

 மேலும், தாக்குதலுக்கு முன்பாகவே,  உளவுத்துறை தகவல் பரிமாறப்பட்டதாகவும், அதிகாரிகள் அலட்சியம் செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.  இதையடுத்து,  மென்டிஸ் உளவுத்துறை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.  இந்த நிலையில், இலங்கையின் புதிய உளவுத்துறை தலைவராக ருவன் குலதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: கர்டினல் ரஞ்சித்
இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கர்டினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
2. இலங்கையின் தற்போதைய நிலைக்கு அதிபரின் அதிகார குறைப்பு நடவடிக்கையே காரணம் - சிறிசேனா குற்றச்சாட்டு
இலங்கையின் தற்போதைய நிலைக்கு, அதிபரின் அதிகார குறைப்பு நடவடிக்கையே காரணம் என சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார்.
3. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: குமரி வாலிபரிடம் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை பரபரப்பு தகவல்கள்
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குமரி வாலிபரிடம் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் புதிதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
4. இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: அதிபர் சிறிசேனா உத்தரவு
இலங்கையில் அவசர நிலையை திடீரென மேலும் ஒரு மாதம் நீட்டித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
5. உலக கோப்பை கிரிக்கெட் : இலங்கை - வங்காளதேசம் ஆட்டம் மழையால் ரத்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.