உலக செய்திகள்

கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு + "||" + Foreign Secretary, Vijay Gokhale in Bishkek on PM Narendra Modi's meet with Russian President Vladimir Putin

கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு

கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு
விளாடிவோஸ்க் நகரில் நடைபெறும் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
பிஷ்கேக்,

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2 நாட்கள் கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்  பங்கேற்க பிரதமர் மோடி  கிர்கிஷ்தான் சென்றுள்ளார்.

இந்த மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார்.  உயர் மட்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.  

இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து  வெளியுறவு செயலாளர் கோகலே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

இந்தியா - சீனா இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவில் சீன வங்கியின் கிளையை தொடங்குவது மசூத் அசார் விவகாரம் உள்பட நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதம் விளாடிவோஸ்க் நகரில் நடைபெறும் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய அதிபரின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூன் மாதத்தில் புதினையும் ஜி ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன்: டொனால்டு டிரம்ப்
ஜூன் மாதத்தில் ரஷ்ய தலைவர் புதினையும் ஜி ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.