கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து + "||" + World Cup cricket India - New Zealand match Canceled by rain

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
நாட்டிங்காம், 
 
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், 15-வது நாளான இன்று (வியாழக்கிழமை) நாட்டிங்காமில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது.

இந்திய நேரப்படி இந்தப் போட்டி பிற்பகல் 3 மணிக்கு துவங்கும். போட்டி துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு டாஸ் போடப்படும். ஆனால், மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. 

இந்நிலையில், நாட்டிங்காமில் தொடர்ந்து மழைபெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இதுவரை 4 போட்டிகள் மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
இந்தியா வலிமையான, பாதுகாப்பான நாடு என்ற கனவை நிறைவேற்ற அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
2. இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செல்கிறார்கள் - மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்
இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செல்கிறார்கள். இதில் 48 சதவீதம் பேர் பெண்கள் என மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தகவல் தெரிவித்தார்.
3. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் ஐதராபாத்தில் 2 பேர் கைது
ஐதராபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் ஆடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. இந்திய அணி பெற்ற வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடிய ரசிகர்கள்..!
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை வீழ்த்தியதையடுத்து, நாடு முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.