தேசிய செய்திகள்

நீட் தேர்வு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை + "||" + NEET (UG)-2019 Wrong Answer Key SC Agrees To Hear Plea Of Students Tomorrow

நீட் தேர்வு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

நீட் தேர்வு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
நீட் தேர்வு தொடர்பான வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
புதுடெல்லி, 

இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

இதற்கிடையே நீட் தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில், நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 4 கேள்விகள் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமையாமல், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் பல மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே மறுமதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

மாணவர்கள் தரப்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வில், இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்குமாறு முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வு: எடப்பாடி அருகே மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் எடப்பாடி அருகே, பாரதபிரியன் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2. நீட் தேர்வு தொடர்பான வழக்கு: டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை
நீட் தேர்வு தொடர்பான வழக்கில், டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.
3. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு
தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் 10-க்கும் குறைவான மாணவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
4. இளைஞர்களின் வளர்ச்சிக்கு நீட் தேர்வு தடையாக உள்ளது - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
இளைஞர்களின் வளர்ச்சிக்கு நீட் தேர்வு தடையாக உள்ளது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
5. நீட் தேர்வு; சென்னை அரசு பள்ளி மாணவிக்கு முதற்கட்ட நிதியுதவி வழங்கினார் தமிழிசை சவுந்தரராஜன்
நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அரசு பள்ளி மாணவி ஜீவிதாவை நேரில் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் முதற்கட்டமாக ரூ 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.