உலக செய்திகள்

சீனாவில் மழை,வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: 49 பேர் பலி 14 பேர் மாயம் என தகவல் + "||" + Torrential Rains Kill 49 and Affect Millions in Southern China

சீனாவில் மழை,வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: 49 பேர் பலி 14 பேர் மாயம் என தகவல்

சீனாவில் மழை,வெள்ளம் மற்றும் நிலச்சரிவு:  49 பேர் பலி 14 பேர் மாயம் என தகவல்
சீனாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 49 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஜீங்

சீனாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 8 மாகாணங்களில் சுமார் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தெற்குப் பகுதியில் உள்ள குவாங்ஸி ((Guangxi)) பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 7 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளத்தினால் ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டது. 

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 8 மாகாணங்களில் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இயற்கையின் இந்த ருத்ர தாண்டவத்துக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் மாயமாகி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.