தேசிய செய்திகள்

பீகாரில் 2 நாளில் 56 குழந்தைகள் உயிரிழப்பு + "||" + Encephalitis outbreak in Bihar leaves 56 children dead

பீகாரில் 2 நாளில் 56 குழந்தைகள் உயிரிழப்பு

பீகாரில் 2 நாளில் 56 குழந்தைகள் உயிரிழப்பு
பீகாரில் 2 நாளில் 56 குழந்தைகள் மூளைகாய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா,

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது.

இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்காளக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் வரை 41 குழந்தைகள் பலியாகி இருந்தனர்.  முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில் முசாபர்பூர் நகரில் இதுவரை 45  குழந்தைகள் மூளைக்காய்சலால் பலியாகி உள்ளனர். அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனை கல்லூரியில் திடீர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள 133 குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. ரத்தத்தில் குளுக்கோஸ் குறைவு நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் 12 மாவட்டங்களிலும் இந்த காய்ச்சல் தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய்வதற்காக மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.