மாநில செய்திகள்

கீழடியின் பெருமையை உலக அளவில் தமிழக அரசு கொண்டு செல்லும் - அமைச்சர் பாண்டியராஜன் + "||" + Minister Pandiarajan

கீழடியின் பெருமையை உலக அளவில் தமிழக அரசு கொண்டு செல்லும் - அமைச்சர் பாண்டியராஜன்

கீழடியின் பெருமையை உலக அளவில் தமிழக அரசு கொண்டு செல்லும் - அமைச்சர் பாண்டியராஜன்
“கீழடியின் பெருமையை தமிழக அரசு உலக அளவில் கொண்டு செல்லும்” என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
திருப்புவனம், 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 3 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. இதில் மொத்தம் 7818 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்தநிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 4-வது கட்ட அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதில் 5820 பொருட்கள் கிடைத்தன.

அதைத்தொடர்ந்து 5-வது கட்ட அகழாய்வு பணிகளை நேற்று தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அருங்காட்சியகம்

கீழடியில் மொத்தம் 13 ஆயிரத்து 638 பொருட்கள் இதுவரை கிடைத்துள்ளன. கீழடியில் சுமார் 2 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக தொல்லியியல்துறை சார்பில் இதுவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 40 இடங்களில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அருங்காட்சியகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. கேரள மாநிலம் பட்டணத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் உலக தரம் வாய்ந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே தரத்தில் கீழடியிலும் அகழ்வாராய்ச்சி நடைபெறும். ஏற்கனவே நடந்த 4 கட்ட அகழ்வாராய்ச்சிக்காக 35 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. 5-வது கட்ட அகழ்வாராய்ச்சியில் இன்னும் 15 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறும். இந்த பணிகள் 5 மாத காலத்தில் நிறைவு பெறும். கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் முடிந்தவுடன் அருங்காட்சியக கட்டிட வேலை ஆரம்பிக்கப்படும்.

உலக அளவில்....

விரைவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொல்லியல் துறை விஷன் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளார். கீழடி அகழ்வாராய்ச்சியையும், அதன் வரலாற்று பெருமையையும் உலக அளவில் கொண்டு செல்வதற்கு தமிழக அரசு மும்முரமாக பணியாற்றும்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடி ஆராய்ச்சிக்கும் தி.மு.க.விற்கும் தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார். அது தவறு. தி.மு.க ஆட்சி காலம் நடைபெற்ற 5 வருடத்திற்கும் சேர்த்து தொல்லியல் துறைக்கு ரூ.55 கோடி மட்டும் தான் ஒதுக்கி உள்ளனர்.

ஆனால் தமிழக அரசு ஒரு வருடத்திற்கு ரூ.123 கோடி ஒதுக்கி உள்ளது. கீழடியில் நடைபெறும் இந்த 5-வது கட்ட ஆராய்ச்சிக்கு ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மொகஞ்சதாராவை போன்று கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
மொகஞ்சதாராவை போன்று கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.
2. கோவில்களில் உள்ள சிற்பங்களை அடையாளப்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
கோவில்களில் உள்ள சிற்பங்களை அடையாளப்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.