தேசிய செய்திகள்

நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை + "||" + Supreme Court to hear students' plea on NEET questions: Here’s when and how

நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை

நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை
பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதாக கூறி மாணவர்கள் தொடர்ந்த வழக்கை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது.
புதுடெல்லி,


இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதற்கிடையே நீட் தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில், நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 4 கேள்விகள் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமையாமல், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் பல மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே மறுமதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

மாணவர்கள் தரப்பில்,  நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வில், இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்குமாறு முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி வழக்கு: இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞரால் பரபரப்பு
அயோத்தி இறுதிகட்ட விசாரணையின்போது இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
2. அயோத்தி வழக்கு: எங்களிடம் மட்டுமே கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன- முஸ்லீம் தரப்பு ஆதங்கம்
அயோத்தி வழக்கு விசாரணையின் போது எங்களிடம் மட்டுமே கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன என்று முஸ்லீம் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
3. அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்
அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடங்குகிறது.
4. ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரிக்கிறது.
5. சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானதாக மாறி வருகிறது -சுப்ரீம் கோர்ட்டு
சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானதாக மாறி வருகிறது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.