மாநில செய்திகள்

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை விகிதம் வீழ்ச்சி அடையும்? + "||" + This year In engineering studies Student enrollment rate will fall?

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை விகிதம் வீழ்ச்சி அடையும்?

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை விகிதம் வீழ்ச்சி அடையும்?
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை விகிதம் மேலும் வீழ்ச்சியடையும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 24 சதவீதம் பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் ஈடுபடவில்லை. எனவே, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை விகிதம் மேலும் வீழ்ச்சியடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகின்றது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்களே விண்ணப்பித்து இருந்தனர். அதாவது விண்ணப்பிக்கும் நிலையிலேயே 39 ஆயிரத்து 32 பொறியியல் இடங்கள் நிரம்பாது என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான  சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்க்க வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், இதுவரை 1 லட்சத்து ஆயிரத்து 672 மாணவர்களே தங்களுடைய சான்றிதழை சரிபார்த்துள்ளனர். அதாவது விண்ணப்பித்த மாணவர்களில் 31 ஆயிரத்து 444 பேர், அதாவது 24 சதவீத மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு நிலையில், சுமார் 70 ஆயிரம் பொறியியல் இடங்கள், அதாவது மொத்த எண்ணிக்கையில் 41 சதவீத இடங்கள் நிரம்பாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் கலந்தாய்வில் பங்குபெறாமல் போகும்போது இந்த விகிதம் மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை விகிதம் மேலும் வீழ்ச்சியடையும்.