உலக செய்திகள்

தொகுதிக்கு பணம் ஒதுக்காததால் பெண் எம்.பியை கன்னத்தில் அறைந்த ஆண் எம்பி + "||" + Since there is no money for the block The girl snatched the MP on the cheek  Male MP

தொகுதிக்கு பணம் ஒதுக்காததால் பெண் எம்.பியை கன்னத்தில் அறைந்த ஆண் எம்பி

தொகுதிக்கு பணம் ஒதுக்காததால் பெண் எம்.பியை கன்னத்தில் அறைந்த ஆண் எம்பி
தனது தொகுதிக்கு பணம் ஒதுக்காததால் சக பெண் எம்.பியை அறைந்த குற்றச்சாட்டில் ஆண் எம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
கென்யாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தொகுதிக்கு பணம் ஒதுக்காததால் சக பெண் எம்.பியை அறைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷித் காசிம் என்ற அந்த எம்.பி, தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள பட்ஜெட் கமிட்டியை சேர்ந்த பதுமா கெடி என்ற பெண் எம்பியை அறைந்ததாக  கூறப்படுகிறது. கெடி, வாயில் ரத்தத்துடன் அழுவது போன்ற புகைப்படம் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.

வட கிழக்கு கென்யாவில் உள்ள வாஜிர் கிழக்கு பகுதியின் எம்.பியான காசிம், நாடாளுமன்ற கார் நிறுத்தத்தில் வைத்து கெடியுடன் தனது தொகுதிக்கு பணம் தராதது குறித்து சண்டையிட்டு பின் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் எம்.பிக்களை ஆண் எம்.பிக்கள் கேலி செய்ததால் அவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. புரோட்டோகாலை மீறும் வகையில் நடந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நெறிமுறைகளை மீறும் வகையில் நடந்துகொண்டுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.
2. ஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்
ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகனுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3. ஆஸ்திரேலிய பிரதமராக ஸ்காட் மாரிசன் மீண்டும் பதவியேற்பு
ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஸ்காட் மாரிசன் இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
4. எல்லைக்குள் பறந்த ரஷ்ய குண்டு வீசும் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா
ரஷ்யாவின் போர் விமானங்களை அலாஸ்கா அருகே இடைமறித்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.
5. நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்ட ஆசிய கலாச்சாரத் திருவிழா தொடங்கியது
நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்ட ஆசிய கலாச்சாரத் திருவிழா சீனாவில் கோலாகலமாகத் தொடங்கியது.