மாநில செய்திகள்

எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது + "||" + SahityaAkademiAward for writer Sabarinathan

எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது

எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது
குழந்தைகள் இலக்கியத் துறைக்கு அளித்த பங்களிப்பிற்காக, எழுத்தாளர் தேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

சாகித்திய அகாடமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

படைப்பாளிகளின் இலக்கிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி  இளம் எழுத்தாளர்களுக்கு ‘யுவ புரஸ்கார்’ விருதினையும், சிறுவர் இலக்கிய படைப்பாளிகளுக்கு ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதையும் வழங்கி கெளரவித்து வருகிறது.

பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 

இந்நிலையில்,  2019ம் ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் மற்றும் பால புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள்  தமிழகத்தில் இருந்து இரண்டு படைப்பாளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வால் என்ற கவிதை தொகுப்புக்காக எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று குழந்தைகள் இலக்கிய உலகில் பெரும் பங்காற்றி வருகின்ற தேவி நாச்சியப்பனுக்கு 2019-ம் ஆண்டிற்கான ‘பால புரஸ்கார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிதை என்பதையும் அந்த வடிவத்தையும் தீவிரமாகவும் பொறுப்பாகவும் எதிர்கொள்ளும் கலைஞர்கள் தலைமுறைதோறும் அரிதாகவே வருகிறார்கள். அவர்களில் ஒருவர் சபரிநாதன். கவிதையையும் விமர்சனத்தையும் மொழிபெயர்ப்புகளையும் செய்துவரும் சபரிநாதன், ‘களம் காலம் ஆட்டம்’, ‘வால்’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகள் மூலம் கவனம் பெற்றவர். ஸ்கான்டிநேவியக் கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகளை ‘உறைபனிக்குக் கீழே’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். தத்துவம், வாழ்க்கை வரலாறு, அறிவியல் என வாசிப்பும் ஈடுபாடும் கொண்ட சபரிநாதனுக்கு வயது 29 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...