உலக செய்திகள்

இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா + "||" + US ready to help India's defence but buying S-400 from Russia would limit cooperation: Trump administration

இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா

இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா
இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்

எஸ்-400 ஏவுகணைப் பாதுகாப்பு முறையை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இது, அமெரிக்கா-இந்தியா இடையேயான பாதுகாப்புத்துறை உறவில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா மறைமுகமாக  எச்சரித்திருந்தது.

இந்நிலையில், வெளியுறவுத்துறை சார்ந்த அமெரிக்க நாடாளுமன்ற நிலைக்குழுவில், அந்நாட்டு வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஆலிஸ் ஜி வெல்ஸ் இந்திய-அமெரிக்க பாதுகாப்புத்துறை உறவுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்ற தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவது என, அதிபர் டிரம்ப் நிர்வாகம் தெளிவான நிலை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா நினைத்துப் பார்த்திராத வகையில் இருதரப்பு பாதுகாப்பு துறை உறவுகள் மேம்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரஷ்யாவிடமிருந்து பாரம்பரியமாக இந்தியா ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்து வருகிறது என்றாலும், தற்போது எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா வாங்குவது இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்பை  மட்டுப்படுத்தி விடும் என்றும் ஆலிஸ் ஜி வெல்ஸ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் கார் விபத்தில் இந்திய வாலிபர் பலி
அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்திய வாலிபர் ஒருவர் பலியானார்.
2. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகை
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இன்று வருகை தருகிறார்.
3. உலகைச்சுற்றி...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 வயதான வாலிபர் பலியானார்.
4. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சவூதி அரேபியா பயணம்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
5. கோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை ஊதித்தள்ளியது பிரேசில்
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பெருவை ஊதித்தள்ளி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.