உலக செய்திகள்

40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் தலை கண்டுபிடிப்பு + "||" + Lived 40,000 years ago Ice wolf Head detector

40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் தலை கண்டுபிடிப்பு

40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் தலை கண்டுபிடிப்பு
ரஷ்யாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் ஒன்றின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் சைபீரியாவில் உருகிவரும் பனிக்கிடையே, அழிந்த மாமோத் வகை யானைகளின் தந்தம் கிடைக்குமா என அப்பகுதியினர் தேடினர். அப்போது திரெக்டியாக் நதிக்கரையோரம் ஒருவர் உயிரினம் ஒன்றின் தலையை கண்டெடுத்து அங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைத்தார்.

ஆராய்ச்சியாளர்கள் நடத்திய தீவிர பரிசோதனையில், தோலின் மேலுள்ள உரோமம், பல், மூளை, முக தசைகளுடன் இருந்த அந்த ஓநாயின் தலை 40,000 ஆண்டுகளுக்கு முன்புடையது என கண்டுபிடித்துள்ளனர்.

அக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட பேரழிவில் சிக்கி இந்த ஓநாய் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள், ஓநாய் தலையை அரிய வகை கண்டுபிடிப்பாக வியப்புடன் பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. செடிகளை சாப்பிட்ட இரண்டு ஆடுகளை கைது செய்த போலீசார்
தெலுங்கானா மாநிலம் ஹுசுராபாத் பகுதியில் செடிகளை சாப்பிட்டதால் இரண்டு ஆடுகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளன.
2. விமானத்தில் மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவர்
விமானத்தில் பயணித்த மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
3. இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்
சபாநாயகர் தன் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
4. வீட்டின் படுக்கையறையில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு
ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் படுக்கையில் பெரிய மலைப்பாம்பு ஓய்வெடுத்து கொண்டு இருந்ததை கண்டு வீட்டை சேர்ந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
5. உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்கள்
உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்களின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...