மாநில செய்திகள்

பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் + "||" + Transgender can also apply to 30% reservation TNGovt

பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி பிரிவு உருவாக்கி கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி   கிரேஷ் பானு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதனையடுத்து சமூகநலத்துறை ஆணையர் அமுதவள்ளி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.  

அதில்  அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான 30% இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்.  வேலைவாய்ப்பு அலுவலகங்களில் திருநங்கைகள் பதிவு செய்யும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து  இந்த  வழக்கை ஜூலை 17-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.