தேசிய செய்திகள்

நீட் தேர்வு தொடர்பான வழக்கு: டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை + "||" + Case related NEET Exam: The Supreme Court advised to access the Delhi High Court

நீட் தேர்வு தொடர்பான வழக்கு: டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை

நீட் தேர்வு தொடர்பான வழக்கு: டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை
நீட் தேர்வு தொடர்பான வழக்கில், டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.
புதுடெல்லி,

இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

இதற்கிடையே நீட் தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 4 கேள்விகள் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் பல மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே மறுமதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.


இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனுசிங்வி வாதாடுகையில், கேள்வித்தாள்களில் இருந்த சில சிக்கல்கள் பற்றி எடுத்துரைத்தார். விசாரணையில் கலந்து கொண்ட மற்றொரு வக்கீல் சவுரிஷ் கோஷ், வேறு சில மாணவர்களின் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மனுக்களின் மீதான விசாரணை அங்கு திங்கட்கிழமையன்று நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டை அணுகுமாறும், இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுரை வழங்கினார்கள். அதை ஏற்றுக்கொண்ட மனுதாரர் தரப்பு வக்கீல், மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவில் நிதிநிறுவனத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி மோசடி 3 பேர் மீது வழக்கு
நாகர்கோவிலில் நிதிநிறுவனத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி மோசடி செய்த 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது
கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
3. நீட் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது; மு.க. ஸ்டாலின்
நீட் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது என்று மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
4. திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை
நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக, கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.