தேசிய செய்திகள்

பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேவி நாச்சியப்பன் தேர்வு: கவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது - சாகித்ய அகாடமி அறிவிப்பு + "||" + Devi Nachiyappan Selection for the Pala Sahitya Puraskar Award: Poet Sabariyanathan Yuva Puraskar Award - Sahitya Akademi Announcement

பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேவி நாச்சியப்பன் தேர்வு: கவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது - சாகித்ய அகாடமி அறிவிப்பு

பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேவி நாச்சியப்பன் தேர்வு: கவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது - சாகித்ய அகாடமி அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கவிஞர் சபரிநாதனுக்கும், பால சாகித்ய புரஸ்கார் விருது தேவி நாச்சியப்பனுக்கும் வழங்கப்படுவதாக சாகித்ய அகாடமி அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு செப்பு பட்டயத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படும்.


2019-ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மொத்தம் 23 பேருக்கு யுவ புரஸ்கார் விருதும், 22 பேர் பால சாகித்ய புரஸ்கார் விருதும் பெறுகின்றனர். இதில் 2 பிரிவிலும் தமிழக எழுத்தாளர்கள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

‘வால்’ என்ற கவிதை தொகுப்புக்காக கவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கவிஞர் சபரிநாதன் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள அரசு வேலை வாய்ப்பகத்தில் செயல் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பை தொடர்ந்து எழுதி வருப வர். இவர் 2011-ம் ஆண்டில் ‘களம் காலம் ஆட்டம்’ மற்றும் 2016-ம் ஆண்டில் ‘வால்’ என்ற தற்போது விருது பெற்றுள்ள கவிதை தொகுப்பையும் எழுதி உள்ளார்.

குழந்தைகள் இலக்கியத்தில் மொத்த பங்களிப்புக்காக தேவி நாச்சியப்பனுக்கு (தெய்வானை) பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

சென்னையில் வசிக்கும் இவர் தமிழின் பிரபலமான குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் மகள் ஆவார். ‘புத்தகத் திருவிழா’, ‘பந்தும் பாப்பாவும்’, ‘பசுமைப்படை’ என்ற குழந்தைகளுக்கான இவருடைய நூல்கள் மிகவும் பிரபலமானவை.

சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர கம்பார் தலைமையில் அமைந்த பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வுக்குழுவில் இந்த ஆண்டு ஆர்.மீனாட்சி, கே.எம்.கோதண்டம், குழ.கதிரேசன் ஆகியோர் இருந்தனர்.

யுவ புரஸ்கார் விருதுக்கான தேர்வுக்குழுவில் பேராசிரியர் டாக்டர் கே.பஞ்சாங்கம், டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன், டாக்டர் ஆர்.குறிஞ்சிவேந்தன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

குழந்தைகள் தினமான நவம்பர் 14-ந்தேதி பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் வழங்கப்படும் என்றும், யுவ புரஸ்கார் விருது வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சாகித்ய அகாடமி கூறி உள்ளது.