மாநில செய்திகள்

சென்னையில் 9,100 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி + "||" + in Chennai With 9,100 trucks Distribution of drinking water Sp Velumani

சென்னையில் 9,100 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையில் 9,100 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சென்னையில் 9,100 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார்.
சென்னை

அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னைக்கு போதிய அளவு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கிராமப்புறங்களிலும் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

பருவமழை பெய்யாத காரணத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வாக வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் 9,100 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது எடுத்த நடவடிக்கையை விட சிறப்பாக குழு அமைக்கப்பட்டு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.